புதுடெல்லி: சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழப்பு

புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டார்.
கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்து அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அப்பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணுக்கு நேற்று இரவு 11.10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய தீவிரமாக முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், இதனால் அவர் நேற்று இரவு 11.40 மணியளவில் உயிரிழந்தார் என்றும் மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story