ராபா்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட்டு அனுமதி


ராபா்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட்டு அனுமதி
x

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வதேராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய டெல்லி கோர்ட்டு, அவர்  வெளிநாடு செல்ல தடை விதித்து இருந்தது.

இந்த சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சை மற்றும் வியாபாரத்துக்காக 2 வாரங்களுக்கு ஸ்பெயின் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் வதேரா கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இதை சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும், அவர் பிரிட்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

மேலும் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்து அதற்கான ரசீது, வெளிநாட்டில் அவர் தங்கியிருக்கும் முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story