தாய்மையின் மகத்துவம்: போட்டியின் இடைவேளையில் குழந்தையின் பசியாற்றிய வீராங்கனை!


தாய்மையின் மகத்துவம்: போட்டியின் இடைவேளையில் குழந்தையின் பசியாற்றிய வீராங்கனை!
x
தினத்தந்தி 10 Dec 2019 1:55 PM GMT (Updated: 2019-12-10T19:25:36+05:30)

மிசோரமில் விளையாட்டு போட்டியின் இடைவேளையில் வீராங்கனை ஒருவர் குழந்தைக்கு பசியாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.

அய்சவால்,

மிசோரம் மாநிலம்  துய்கும் என்ற வாலிபால் அணியை சேர்ந்த வீராங்கனை லால்வென்ட்லுயாங்கி என்பவர் மிசோரம் மாநில அளவிலான வாலிபால் தொடர் போட்டியில் பங்கேற்றுள்ளார். அபாரமாக ஆடி அணி வெற்றிக்கு உதவுவது ஒரு பக்கம் என்றால், அவ்வப்போது இடைவேளையில் ஓடி வந்து தனது 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டவும் அவர் மறப்பதில்லை.

குழந்தைக்கு பசியாற்ற வேறு வழிகள் இருந்தபோதிலும், தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கவில்லை இவர். அது தான் இந்த நிகழ்வுக்கான முக்கியத்துவமாக கருதப்படுகிறது.  எனவே தான் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. 

பலரும் இந்த வீராங்கனையை பாராட்டி வருகின்றனர். மிசோரம் மாநில மந்திரி  ராபர்ட் ரோமாவியா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீராங்கனை தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் படத்தை பகிர்ந்துள்ளார். அந்த வீராங்கனைக்கு தனது சல்யூட் என்று கூறி உள்ளார். இப்போது அந்த போட்டோ வைரலாகி வருகிறது.

Next Story