உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக மேலும் 2 வழக்குகள் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான தி.மு.க. வழக்கில் மாநில தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்தது. மேலும், 2 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகின்றன.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு வரும் 27 மற்றும் 30-ந்தேதிகளில் தேர்தல் நடத்தப்போவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் கடந்த 7-ந்தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன.
வழக்கில், வார்டுகளில் இட ஒதுக்கீடு மற்றும் மகளிர் மற்றும் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் மறுசுழற்சி ஆகியவற்றை சரி செய்த பின்னர்தான் தேர்தல் அறிவிப்பாணையை தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
இதில் சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் கமிஷன் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.
அதில் கூறி இருப்பதாவது:-
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘ரிட்’ மனுவில் உள்ள அத்தனை விஷயங்களும் முற்றாக மறுக்கப்படுகிறது. அந்த மனுவில் அளிக்கப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களும் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவையாகும்.
கடந்த 2016-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் கிராம ஊராட்சி அமைப்புக்களில் தலைவருக்கான பதவிக்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்கில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 6-ந் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.
வார்டு மறுவரையறை 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் தவறாக கூறியிருப்பது போல 1991-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்படவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கருத்தில் கொண்டு உரிய இடஒதுக்கீடு மறுசுழற்சி முறை மற்றும் வார்டு வரையறைகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பற்றி தமிழக அரசு ஏற்கனவே கடந்த மே மாதம் 20-ந் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இந்த ‘ரிட்’ மனு பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்படாமல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே எந்த முகாந்திரமும் இன்றி தாக்கல் செய்யப்பட்ட இந்த ‘ரிட்’ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு மாநில தேர்தல் கமிஷனின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் கரூரை சேர்ந்த வாக்காளர் முருகேசன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள மறைமுக தேர்தலுக்கு எதிராகவும், வார்டு மற்றும் இடஒதுக்கீட்டில் மறுவரையறை கோரியும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேர்தல் நடத்தவும் மறுபரிசீலனை செய்து, முறையாக தேர்தலை நடத்தும் வகையில் மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் காங்கிரஸ் கட்சி தரப்பிலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட தங்கள் மனுவை சிறு திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்திருப்பதாகவும் அதனையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்ற வழக்குகளுடன் இந்த வழக்குகளையும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.
இதே கோரிக்கைகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Related Tags :
Next Story