உணவு இடைவேளை இன்றி ராஜ்யசபையில் குடியுரிமை திருத்த மசோதா மீது விவாதம்


உணவு இடைவேளை இன்றி ராஜ்யசபையில் குடியுரிமை திருத்த மசோதா மீது விவாதம்
x
தினத்தந்தி 11 Dec 2019 8:40 AM GMT (Updated: 2019-12-11T14:10:35+05:30)

நாடாளுமன்ற மேலவையில் உணவு இடைவேளை இன்றி குடியுரிமை திருத்த மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

வட கிழக்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மசோதா, குடியுரிமை திருத்த மசோதா ஆகும்.  நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.  இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற  மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாடு முழுவதும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.  தமிழகத்தின் சென்னையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்து உள்துறை மந்திரி அமித் ஷா பேசி வருகிறார்.  தொடர்ந்து மாநிலங்களவையில் உணவு இடைவேளை இன்றி விவாதம் நடந்து வருகிறது.

Next Story