குடியுரிமை மசோதா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்புக்கு முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


குடியுரிமை மசோதா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்புக்கு முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Dec 2019 3:00 AM IST (Updated: 12 Dec 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை மசோதா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்புக்கு முயற்சி நடப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

குடியுரிமை மசோதா தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று கருத்து வெளியிட்டார். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டம் தொடர்பான பத்திரிகை செய்தியையும் அவர் இணைத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்பு நடத்தும் மோடி-அமித் ஷா அரசின் முயற்சிதான், குடியுரிமை மசோதா. அது, வடகிழக்கு மாநிலங்கள் மீதும், அவர்களின் வாழ்க்கை முறை மீதும் நடத்தப்படும் குற்றவியல் தாக்குதல்.

வடகிழக்கு மாநில மக்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன். அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story