மெகுல் சோக்சி மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய முடியாது - மும்பை கோர்ட்டு உத்தரவு


மெகுல் சோக்சி மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய முடியாது - மும்பை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Dec 2019 3:16 AM IST (Updated: 14 Dec 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்சி மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய முடியாது என மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் விசாரணைக்கு ஆஜராக மெகுல் சோக்சிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிறப்பு கோர்ட்டு பிறப்பித்தது.அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மெகுல் சோக்சி சார்பில் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சி.வி.பாரடே, மெகுல் சோக்சிக்கு எதிரான ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்டை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும் அவரது மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story