அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்


அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-16T02:27:39+05:30)

அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. எனவே, மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜனதா சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சாவர்க்கரை ‘மண்ணின் மைந்தர்’ என்று கூறினார். ஆனால், அவருடைய பேரன் ராகுல் காந்தியோ, சாவர்க்கரை அவதூறாக பேசுகிறார்.

மேலும், ராகுல் காந்தி குடும்பம், அரசியல் ஆதாயத்துக்காக ‘காந்தி’ என்ற பெயரை திருடி, தங்களது குடும்பப்பெயராக ஆக்கி விட்டது. ஆகவே, ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story