ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பின்னோக்கி நடக்கும் போராட்டம்


ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பின்னோக்கி நடக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2019 3:59 PM IST (Updated: 16 Dec 2019 3:59 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமராவதி

ஆந்திர சட்டசபையின் குளிர்கால கூட்டம் 2 நாள் விடுமுறைக்கு பின் நடந்து வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகம் முதல் சட்டமன்ற கட்டிடம் வரை அம்மாநில முன்ளாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமது தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களுடன் சேர்ந்து பின்னோக்கி நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசால் ஆந்திர மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் பின்னோக்கி செல்வதாக கூறி, அதனை குறிக்கும் வகையில் அவர்கள் பின்னோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 More update

Next Story