இந்தியக் குடியுரிமை தானாக யாருக்கும் வழங்கப்படாது : உள்துறை அமைச்சக அதிகாரிகள்


இந்தியக் குடியுரிமை தானாக யாருக்கும்  வழங்கப்படாது : உள்துறை அமைச்சக அதிகாரிகள்
x
தினத்தந்தி 16 Dec 2019 12:29 PM GMT (Updated: 2019-12-16T17:59:19+05:30)

இந்தியக் குடியுரிமை தானாக யாருக்கும் வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய குடியுரிமை சட்டத்தின் படி,  யாருக்கும் தானாக குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்துறை அமைச்சக அதிகாரிகள் இது பற்றி கூறும் போது, “ புதிய சட்டத்தின் மூலம் சட்ட விரோத குடியேறிகள் அனைவருக்கும் தானாகவே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு விடும் என்று அர்த்தம் இல்லை. 

சட்ட விரோதமாக குடியேறியவர்கள்,  குடியுரிமை கோரி விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில்  உரிய அதிகாரிகளால் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும்” என்றனர். 


Next Story