குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. மாணவர் அணி போராட்டம்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க. மாணவர் அணி போராட்டம் நடத்தியது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) சார்பில் டெல்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. ஏ.பி.வி.பி.யின் மாநில செயலாளர் சித்தார்த் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
Related Tags :
Next Story