சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது


சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2019 8:56 PM GMT (Updated: 2019-12-18T02:26:28+05:30)

சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

வசாய்,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் பொய்சர் பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், 9 பெண்கள் உள்பட 12 வங்கதேசத்தினர் உரிய ஆவணங்கள் இன்றி பொய்சரில் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில் வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story