நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசம் -டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்


நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசம் -டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 19 Dec 2019 8:47 AM GMT (Updated: 2019-12-19T14:17:25+05:30)

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் குடியுரிமை  திருத்த சட்டம் மீதான எதிர்ப்புக்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இன்று அனைத்து குடிமக்களிடையேயும் ஒரு பயம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தைக் கொண்டுவராமல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு மத்திய  அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

Next Story