பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மகளை, ஸ்டிரெச்சர் இல்லாததால் முதுகில் சுமந்து சென்ற தந்தை


பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மகளை, ஸ்டிரெச்சர் இல்லாததால் முதுகில் சுமந்து சென்ற தந்தை
x
தினத்தந்தி 19 Dec 2019 10:23 AM GMT (Updated: 19 Dec 2019 10:49 AM GMT)

உத்தரபிரதேசத்தில் ஸ்டிரெச்சர், வீல் சேர் இல்லாததால் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மகளை சிகிச்சை அளிக்க தந்தை சுமந்து சென்று உள்ளார்.

லக்னோ

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே 15 வயதான சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் தன் வீட்டிற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது அங்கிருந்த தப்பிக்க சிறுமி முயற்சித்தபோது ஒரு கால் உடைந்து காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமி வீட்டில் சொல்ல தந்தை உடனே மகளை கூட்டிக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் பெண் காவலரும் உடன் அனுப்பி வைக்கப்பட்டார். மூவரும் புதிதாகக் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையான ஒன் ஸ்டெப் சென்டருக்கு  சென்றுள்ளனர். அங்கு ஸ்டிரெச்சர், வீல் சேர் எதுவும் இல்லாததால் நடக்க முடியாத தன் மகளை முதுகிலேயே சுமந்து சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து எடா  மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அஜய் அகர்வால் அந்த மாவட்ட அதிகாரியிடம் இதற்கான வசதிகளை ஏற்படுத்த கடிதம் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அந்த மாவட்ட அதிகாரியிடம் இன்னும் ஏன் ஸ்டிரெச்சர் வசதி ஏற்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியதில் அந்த மருத்துவமனை மாவட்ட சமூக நலன்  அதிகாரி ரஷ்மி யாதவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார். ரஷ்மி யாதவை அனுகிய போது நான் இன்னும் பணியை தொடங்கவில்லை என்று கூறியுள்ளார்.

இப்படி அலட்சியமான பதிலை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அந்த இடத்தில் ஸ்கேன் செய்வதற்கான கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. பின் மகளைக் கூட்டிக்கொண்டு அலிகார் மருத்துவமனைக்குச விரைந்துள்ளார் சிறுமியின் தந்தை.

Next Story