“எதற்காக நமது நாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள்?” - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி


“எதற்காக நமது நாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள்?” - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி
x
தினத்தந்தி 4 Jan 2020 5:00 AM IST (Updated: 4 Jan 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா வளமான கலாசாரம், பாரம்பரியம் கொண்ட நாடாக இருக்கிறபோது, எதற்காக பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

சிலிகுரி, 

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றி உள்ளது.

ஆனால் இந்த சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

பல மாநிலங்கள், இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறி போர்க்கொடி உயர்த்துகின்றன. கேரள சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றி உள்ளனர்.

இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம், சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், மக்கள் தாங்கள் இந்தியர்கள்தான் என நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது வெட்கக்கேடானது.

இந்தியா வளமான கலாசாரம், பாரம்பரியம் கொண்ட பெரிய நாடு. எதற்காக பிரதமர் நமது நாட்டை அடிக்கடி பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டும்?

நீங்கள் (மோடி) இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தான் தூதரா? ஒவ்வொரு பிரச்சினையிலும், ஏன் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள்?

தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) திட்டத்தை செயல்படுத்துவதில் பாரதீய ஜனதா கட்சி வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு பக்கம் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று பிரதமர் சொல்கிறார். இன்னொரு பக்கம், மத்திய உள்துறை மந்திரியும், மற்ற மந்திரிகளும் நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் என்கிறார்கள். இப்படி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story