ஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீச்சு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் கவாத்ரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினரின் வாகனம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக நிகழ்விடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story