டெல்லி அரசாங்கத்தின் திட்டங்கள் ஜார்க்கண்டில் அமல்படுத்தப்படும் - ஹேமந்த் சோரன்
டெல்லி அரசாங்கத்தின் திட்டங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தியுள்ள கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான செயல்திட்டங்கள் தனக்கு ஒரு முன்னோடியாக திகழ்வதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஹேமந்த் சோரன், “டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பொதுக் கல்வி மற்றும் சுகாதார முயற்சிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஜார்க்கண்டிலும் இதேபோன்ற முயற்சிகளைச் செயல்படுத்த இந்த சந்திப்பு உத்வேகம் அளித்தது” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story