மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது; 2 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் பயிற்சி விமானி மற்றும் பயிற்சியாளர் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு, ஒரு பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
2 இருக்கைகளை கொண்ட அந்த விமானத்தில், மும்பையை சேர்ந்த பயிற்சி விமானி சந்தலும், பயிற்சியாளர் மக்வானாவும் இருந்தனர். அந்த விமானம் சற்றும் எதிர்பாராத வகையில், தானா வான்வழி அருகே வயலில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அடர்ந்த மூடுபனி காரணமாக இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பலியான 2 பேரின் உடல்களும் நேற்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
Related Tags :
Next Story