ரூ.175 கோடி போதைபொருள் பறிமுதல் -5 பாகிஸ்தானியர் கைது


ரூ.175 கோடி போதைபொருள் பறிமுதல் -5 பாகிஸ்தானியர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2020 6:40 AM GMT (Updated: 2020-01-06T12:10:06+05:30)

குஜராத்தில் ரூ.175 கோடி போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அகமதாபாத்

குஜராத் கடற்கரையில் குஜராத்தின் பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது  குஜராத்தில் உள்ள கட்ச் கடற்கரையின் நடுப்பகுதியில் ஒரு படகை பிடித்தனர். அதில் ரூ.175 கோடி மதிப்புள்ள ஹெராயின் கொண்டு வந்த  ஐந்து பாகிஸ்தான் நாட்டினரை கைது செய்தனர்.

குஜராத் டிஜிபி சிவானந்த் ஜா ட்விட்டரில் கூறி உள்ளதாவது:-

மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கான முயற்சிகளைத் தடுக்க  நாங்கள் ஒன்றிணைந்து உள்ளோம். மேலும் 1600 கி.மீ நீளமுள்ள கடற்கரையின் பாதுகாப்புக்கு முன்னால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். குஜராத்தின் பயங்கரவாத தடுப்புப் படை இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டு நடவடிக்கையில் 5 பாகிஸ்தான் நபர்களை ரூ.175 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் பிடித்து உள்ளோம் என கூறி உள்ளார்.

Next Story