வேலை நிறுத்தத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு


வேலை நிறுத்தத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
x
தினத்தந்தி 9 Jan 2020 12:06 AM IST (Updated: 9 Jan 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

25 கோடி தொழிலாளர்கள் ‘பாரத் பந்த்’துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வணக்கம் செலுத்துகிறேன்.

மோடி–அமித் ஷா அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளால், வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. மோடியின் கொழுத்த பணக்காரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை நியாயப்படுத்துவதற்காக, அந்த நிறுவனங்கள் நலிவடைய செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story