தேசிய செய்திகள்

அசாம் பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி + "||" + PM Modi Turns Down Invite To Inaugurate Khelo India Youth Games In Assam

அசாம் பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி

அசாம் பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி
'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்' அசாமின் கவுகாத்தி நகரில் 10-ம்தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அசாமில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்,   கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்' அசாமின் கவுகாத்தி நகரில் 10-ம்தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

 ஆனால், பிரதமர் மோடி அசாம் வருகை தந்தால் மிகப்பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில்,  கேலா விளையாட்டு  விழாவில் பங்கேற்பதை மோடி தவிர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ' இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் அசாம் அரசுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

இதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரும் அசாம் பயணத்தை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
2. பிரதமர் மோடி கடுமையானவர் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்
வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.
3. இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம்-டொனால்டு டிரம்ப்
இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.
4. அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் - மோடிக்கு டொனால்டு டிரம்ப் புகழாரம்
அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் மோடியை புகழ்ந்தார்.
5. இரு நாட்டு உறவுகளை நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் - பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பிரதமர் மோடி கூறினார்.