குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி


குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2020 6:41 PM IST (Updated: 11 Jan 2020 6:41 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜூனாகத்,

குஜராத் மாநிலம்  ஜூனாகத் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்றில் 50-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து சவர்குண்ட்லாவிலிருந்து ஜுனகத் செல்லும் வழியில் திடீரெனெ  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடங்குவார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 More update

Next Story