குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா? மம்தா பானர்ஜி, ராகுல்காந்திக்கு அமித்ஷா சவால்


குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா? மம்தா பானர்ஜி, ராகுல்காந்திக்கு அமித்ஷா சவால்
x
தினத்தந்தி 12 Jan 2020 6:53 PM IST (Updated: 12 Jan 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தில், இந்த நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா என மம்தா பானர்ஜி மற்றும் ராகுல்காந்திக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

ஜபல்பூர்,

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமதாபாத்தில் வசிப்பவர்களால் எழுதப்பட்ட 5 லட்சம் கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பும் விழா நடந்தது. 

இதில் பங்கேற்று பேசிய அமித்ஷா:-

இவை அனைத்தும் வார்த்தைக்காக மட்டுமல்லாமல் இதயத்தில் இருந்து எழுதப்பட்ட நன்றி கடிதங்கள்.  குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பிரதமர் மோடி, லட்சக்கணக்கான மக்களுக்கு மனித உரிமைகளை வழங்கியுள்ளார்.  

குடியுரிமை திருத்த சட்டத்தில், இந்த நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்களின்  குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். ராகுல்காந்தியால் காட்ட முடியுமா?  என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் நாட்டின் முதல் பிரதமர் நேரு, முதல் உள்துறை மந்திரி, முதல் ஜனாதிபதி, மகாத்மா காந்தி என அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு யார் வந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என கூறியிருந்தனர் என்பதை அமித்ஷா நினைவு கூர்ந்தார்.

Next Story