திரிபுரா போலீஸ் நிலையத்தில் கைதி தூக்கில் தொங்கினார்
திரிபுரா போலீஸ் நிலையத்தில் கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அகர்தலா,
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா அருகே உள்ள லங்கமுரா கிராமத்தை சேர்ந்தவர் சுஷாந்த கோஷ் (வயது 38). போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்த வழக்கில், இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், மேற்கு அகர்தலா போலீஸ் நிலைய லாக்கப்பில் அவர் அடைக்கப்பட்டார்.
அங்கு நேற்று காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சுஷாந்த கோஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர் போலீசாரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மரணம் குறித்து மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

Related Tags :
Next Story