மகள் பாலியல் வன்கொடுமை : புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக்கொலை -குற்றவாளிகள் வெறிச்செயல்


மகள் பாலியல் வன்கொடுமை : புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக்கொலை -குற்றவாளிகள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 Jan 2020 5:59 AM GMT (Updated: 18 Jan 2020 5:59 AM GMT)

மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதான புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் ஜாமீனில் வெளியே வந்த அந்த கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கான்பூர்

உத்தரபிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின்  13 வயது  மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டில் சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் 6 பேருக்கும் விரைவில் உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த வியாழக்கிழமை இந்த 6 பேரும்  அந்தப் பெண் மற்றும் அவரது மகளின் வீட்டிற்குள் நுழைந்து தங்கள் மீதான கிரிமினல் வழக்கைத் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தினர். மறுத்த தாய் மற்றும் மகளையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது.

பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணும் சிறுமியும்  கான்பூரில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் பாஜகவின் உள்ளூர் தலைவியான அவருடைய சகோதரியும் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியின் தாய் உயிரிழந்தார். குற்றவாளிகள் 3 பேரை மீண்டும் கைது செய்த போலீசார் தப்பியோடிய ஒருவனைத் தேடி வருகின்றனர்.

Next Story