டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணி தொடங்கியது


டெல்லியில் அல்வா தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 20 Jan 2020 7:30 AM GMT (Updated: 20 Jan 2020 7:30 AM GMT)

டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் 2020-21க்கான ஆவணங்களை பதிப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் 2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இந்த வருடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.  இந்த பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய அம்சங்கள் அடங்கிய ஆவணங்கள் அதற்குரிய அச்சகத்தில் பதிப்பிக்கப்படும்.

பட்ஜெட் ஆவண பதிப்பிக்கும் பணி தொடங்குவதற்கு முன்பு இனிமையான தொடக்கத்திற்காக அல்வா தயாரித்து மந்திரிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்குவது வழக்கம்.

இதற்காக புதுடெல்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் வடக்கு பிளாக்கில் அல்வா தயாரிக்கும் பணியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார்.  இதனை அடுத்து மத்திய பட்ஜெட் 2020-21க்கான ஆவணங்களை பதிப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

Next Story