மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் வருவாயை பெருக்கும் அறிவிப்புகளுக்கு வாய்ப்பு


மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் வருவாயை பெருக்கும் அறிவிப்புகளுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 29 Jan 2020 10:03 PM GMT (Updated: 31 Jan 2020 12:24 PM GMT)

விவசாயிகள் வருவாயை பெருக்கும் நடவடிக்கைகள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 1-ந் தேதி (சனிக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்காக கடந்த சில வாரங்களாக அவர் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்டறிந்தார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரைவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வேளாண் தொழில்நுட்பம் அடிப்படையிலான ‘ஸ்டார்ட் அப்’ திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையிலான அறிவிப்புகள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையே பிரதமர் மோடி சூசகமாக உணர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் பெரும்பாலான விவசாயிகள், கடந்த 2 ஆண்டுகளாக, வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் செலவளிக்கும் திறன் குறைந்துவிட்டது.

அவர்களின் கைகளில் பணம் அதிகமாக புழங்கினால், அவர் களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதன்மூலம், கிராமப்புற பொருளாதாரம் புத்துயிர் அடைவதுடன், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக் கும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் வாங்கும் திறன் குறைந்ததுதான், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு ஒரு காரணம் ஆகும். எனவே, பொருளாதாரத்தை நிலைநிறுத்த கடன் வழங் குவதை அதிகரிப்பதுடன், கிராமப்புறங்களில் செலவளிக் கும் திறனை உயர்த்த வேண்டும்.

இதுதொடர்பான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும். வருமான வரி சலுகையை விட கிராமப்புற வருவாயை பெருக் கும் கொள்கைகள்தான், வாங்கும் திறனை அதிகரிக்க பெரி தும் உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story