விவசாயிகளுக்காக இரயில் சேவை - விமான சேவை தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்


விவசாயிகளுக்காக இரயில் சேவை - விமான சேவை தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2020 6:34 AM GMT (Updated: 1 Feb 2020 8:41 AM GMT)

விவசாயிகளுக்காக இரயில் சேவை மற்றும் விமான சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்

புதுடெல்லி

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* எனது பட்ஜெட் 2020 மூன்று கருப்பொருள்களைச் சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது.  வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான இந்தியா; அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி; மனிதாபிமான மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குதல் ஆகும்.

* 2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது-

* பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும்.

* ரெயில்வே சார்பில் விவசாயிகளுக்கான இரயில் சேவை உருவாக்கப்படும்; விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பிலும் விவசாயிகளுக்கான விமான சேவை தொடங்க சாத்தியக்கூறுகள்  ஆராயப்படும்

* விரைவில் அழுகக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உதான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.

Next Story