2-வது ஆண்டாக பட்டு துணிப்பையில் பட்ஜெட்டை எடுத்து வந்த நிர்மலா சீதாராமன்


2-வது ஆண்டாக பட்டு துணிப்பையில் பட்ஜெட்டை எடுத்து வந்த நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 2 Feb 2020 12:44 AM IST (Updated: 2 Feb 2020 12:27 PM IST)
t-max-icont-min-icon

நிர்மலா சீதாராமன், 2-வது ஆண்டாக பட்டு துணிப்பையில் பட்ஜெட்டை எடுத்து வந்தார்.

புதுடெல்லி,

பொதுவாக மத்திய பட்ஜெட் தாக்கலுக்காக நிதி மந்திரிகள் நாடாளுமன்றத்துக்கு வரும்போது, பட்ஜெட்டை பெட்டி ஒன்றில் வைத்து எடுத்து வருவார்கள். ஆனால் இந்த நடைமுறையை தற்போதைய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாற்றினார்.

இவர் தனது முதல் பட்ஜெட்டை கடந்த ஆண்டு தாக்கல் செய்வதற்காக வந்தபோது, பட்ஜெட்டை சிவப்பு நிற பட்டுத்துணியில் செய்யப்பட்ட பை ஒன்றில் வைத்து எடுத்து வந்தார். இது அப்போது சிறப்பாக பேசப்பட்டது.

இந்த வழக்கத்தை நேற்றும் அவர் கடைப்பிடித்தார். அதன்படி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் அவர் அதேபோன்ற பட்டு துணிப்பையில் வைத்தே கொண்டு வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
1 More update

Next Story