ஒடிசாவில் 8 பேருக்கு கொரோனா வைரஸ்?

ஒடிசாவில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டாக்,
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலக நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 20,438-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் இருந்து ஒடிசா திரும்பிய 8 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டாக் மருத்துவமனையில் 8 பேர் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என தெரிய வந்துள்ளது. 3 பேர் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.
Related Tags :
Next Story