பதிவான வாக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜரிவால் கேள்வி


பதிவான வாக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்?  தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜரிவால் கேள்வி
x
தினத்தந்தி 9 Feb 2020 12:22 PM GMT (Updated: 9 Feb 2020 12:22 PM GMT)

தேர்தல் முடிந்து பதிவான வாக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்? என தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நேற்று தேர்தல் அமைதியாக நடந்தது. 61.46 சதவீத வாக்குகள் பதிவாயின.  டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் 11-ந்தேதி  எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது என அரவிந்த் கெஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

"தேர்தல் முடிந்து பல மணிநேரம் ஆன பிறகும், மொத்தம் பதிவான வாக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்? தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. இந்தியாவின் வரலாற்றில் இதுபோன்று நிகழ்வது ஒருவேளை இதுவே முதன்முறையாக இருக்கும்" என்றார்.

Next Story