தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது பயணத்திற்குப் பிறகு தூது குழுவினர் மகிழ்ச்சி + "||" + Normalcy is almost back, say envoys after Jammu & Kashmir trip

ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது பயணத்திற்குப் பிறகு தூது குழுவினர் மகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது பயணத்திற்குப் பிறகு தூது குழுவினர்  மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது என பயணத்திற்குப் பிறகு தூதர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின்னர் அவை தளர்த்தப்பட்டன. இதை அடுத்து, அம்மாநிலத்தின் சூழலை ஆய்வு செய்வதற்காக இரண்டாவது வெளிநாட்டுத் தூக்குழு நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் சென்றது.

 20 நாடுகளைச் சேர்ந்த 25 பேர் கொண்ட தூதுக் குழுவினர் நேற்று முந்தினம் ஸ்ரீநகரில் ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசிய வெளிநாட்டுத் தூதுக்குழுவினர், ராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து பாதுகாப்பு நிலவரம் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், ஸ்ரீநகரில் உள்ளதால் ஏரியில் படகு சவாரியும் செய்தனர்

 நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து தூதர்களுக்கு தளபதி தளபதி லெப்டினென்ட் கே. ஜே எஸ் தில்லான்  விளக்கினார், அதைத் தொடர்ந்து குழு ஜம்மு நகருக்கு சென்றது. அங்கு அவர்கள் லெப்டினன்ட் கவர்னர் ஜி எஸ் முர்மு, தலைமைச் செயலாளர் பி வி ஆர் சுப்பு மற்றும் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களை சந்தித்தனர்.  மேலும் தூதுக்குழு ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி  கீதா மிட்டலை  சந்தித்தனர், அவர் தற்போது தடுப்புக்காவல்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்து வருகிறார்.

இந்தியாவுக்கான மெக்சிகோ தூதர் எஃப்.எஸ். லோட்ஃப் கூறும் போது 

இங்கே என்ன நடக்கிறது என்பதற்கான முழு விவரமும் கிடைத்துள்ளது. இயல்புநிலை திரும்புவதாக தெரிகிறது. எந்த சிரமங்களும் இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால், நிலைமையை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதைச் செய்ய அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் என கூறினார் 

ஜம்மு காஷ்மீர் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தூதுக்குழுவைச் சேர்ந்த ஆப்கானிஸ்தானின் நயீம் தார் காத்ரி, காஷ்மீர் மிகச்சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஃபிராங்க் ஹன்ஸ், காஷ்மீர் அழகான சுற்றுலாத் தலமாக உள்ளதாகவும், சுற்றுலாப் பயணியைப் போல் தாங்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர் ; என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
2. ஜம்மு காஷ்மீரில் விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் தடையை மீறி விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீர் ; முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்தி; காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்
பிரிவினைவாத தலைவர் உடல்நிலை குறித்த வதந்திகளைத் தொடர்ந்து காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
5. ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.