ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர்; பிரதமர் மோடி


ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர்; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Feb 2020 1:37 PM GMT (Updated: 22 Feb 2020 1:37 PM GMT)

கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என பேசினார்.

புதுடெல்லி,

ஒடிசாவின் கட்டாக் நகரில் ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளை புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வழியே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும்பொழுது, ஒடிசாவில் முதன்முறையாக கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன.  இந்திய விளையாட்டு போட்டிகளுக்கான வரலாற்றில் குறிப்பிடத்தக்க விசயம் என்பதுடன் நில்லாமல், அதன் வருங்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கேலோ இந்தியா பள்ளிகளுக்கான போட்டிகளில் இந்த வருடம் 80 சாதனைகள் முறியடிக்கப்பட்டு உள்ளன.  அவற்றில் 56 சாதனைகளை சிறுமிகள் செய்து உள்ளனர்.

இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் ஏழை குடும்பத்து மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வந்த வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என்று கூறினார்.

Next Story