இந்தியா பிளவுபட்டு வருகிறது: டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் ராகுல் காந்தி கருத்து
டெல்லியில் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் சென்ற ராகுல் காந்தி, இந்தியா பிளவுபட்டு வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் போராட்டம் நடத்த முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
மோதல் காரணமாக ஏற்பட்ட வன்முறை ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் பரவியது. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறையில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு உளவுப்பிரிவு அதிகாரி உட்பட 49 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று நேரில் பார்வையிட்டனர். இந்த குழுவில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மூத்த தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோர் இருந்தனர்.
டெல்லியில் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின் ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில், “தலைநகரில் ஏற்பட்ட வன்முறையால் இந்தியாவின் புகழ் பாதிக்கப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு ஆகியவை இங்கு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. நமது எதிர்காலம் இங்கே எரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தேன். வெறுப்பும், வன்முறையும் நம்மை அழித்து விட்டது. இந்தியா பிளவுபட்டு வருகிறது. இதனால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவது கிடையாது. இந்திய அன்னையையும், இந்திய மக்களையும்தான் இது பாதிக்கப் போகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story