தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கம் + "||" + Social Media Ban Removed In Kashmir, Broadband Services To Be Restored

ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கம்
ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதி, இணைய வசதி ரத்து செய்யப்பட்டது. லேண்ட்லைன் வசதி இணைப்பும் ரத்து செய்யப்பட்டது.


அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த அரசு நிர்வாகம், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. முன்னதாக ஜனவரி 25ம் தேதி பல நிபந்தனைகளுடன் 2ஜி இணைய இணைப்புகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2ஜி சேவை மட்டுமே வழங்கப்படும் என்றும், 4ஜி சேவைகள் மீதான தடை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த தளர்வு, மார்ச் 17-ம்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும், மார்ச் 17-ம் தேதிக்குள் சேவையை நீட்டித்து உத்தரவு வந்தால், இணைய சேவை நீட்டிக்கப்படும் என்றும் மாநில முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...