இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. சுமார் 100 நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் நாள்தோறும் புதிய நோயாளிகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி வருகிறது.
முன்னதாக உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,836 ஆக அதிகரித்து இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது.

இத்தாலியில் இருந்து கொச்சிக்கு தனது பெற்றோருடன் வந்த 3 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, கர்நாடகா, ஜம்மு, டெல்லி, பஞ்சாப், மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என தொடர்பில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
முன்னதாக உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,836 ஆக அதிகரித்து இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story