காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிர்ஆதித்யா சிந்தியா ராஜினாமா


காங்கிரஸ் கட்சியில் இருந்து  ஜோதிர்ஆதித்யா சிந்தியா ராஜினாமா
x
தினத்தந்தி 10 March 2020 12:24 PM IST (Updated: 10 March 2020 3:06 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிர்ஆதித்யா சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிர்ஆதித்யா சிந்தியா அக்கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். மாநிலத்தில், தனது ஆதரவாளர்களுக்கும் தனக்கும்  எந்த வித முக்கிய பொறுப்புகளும் அளிக்கப்படவில்லை என்பதால்  ஜோதிர் ஆதித்யா சிந்தியா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. 

இதையடுத்து, தனது  ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேரை கர்நாடகாவில் தங்க வைத்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். சற்று நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு  ஜோதிர் ஆதித்யாசிந்தியா கடிதம் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதன் மூலம், ஜோதிர்ஆதித்யா சிந்தியா பாஜகவில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.  மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவராக இருந்த ஜோதிர்ஆதித்யா சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகியதன் மூலம்,  மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Next Story