காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது; ஜோதிர் ஆதித்யா சிந்தியா


காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது; ஜோதிர் ஆதித்யா சிந்தியா
x
தினத்தந்தி 10 March 2020 1:20 PM IST (Updated: 10 March 2020 3:10 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்று ஜோதிர்ஆதித்யா சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து  ஜோதிர் ஆதித்யாசிந்தியா  இன்று ராஜினாமா செய்துள்ளார்.  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்று ஜோதிர்ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.  

தனது ராஜினாமா கடிதத்தில் ஜோதிர்ஆதித்யா சிந்தியா கூறியிருப்பதாவது;- “காங்கிரஸில் இருந்தால் நாட்டுக்கும் எனது மாநில மக்களுக்கும் பணியாற்ற முடியாது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் அவசியம். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகுகிறேன். 18 ஆண்டுகளாக இருக்கிறேன் - தற்போது விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே இந்த பாதையில் இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

Next Story