பா.ஜனதா தேர்தல் குழு ஆலோசனை கூட்டம்: மோடி, அமித்ஷா பங்கேற்பு
பா.ஜனதா தேர்தல் குழு ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
புதுடெல்லி,
மத்தியபிரதேச அரசியல் பரபரப்புகளுக்கு இடையே டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பா.ஜனதா தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
பிரதமர் நரேந்திரமோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Tags :
Next Story