கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பஸ், ரெயில்களில் சுகாதார பணி: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பஸ், ரெயில்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது.
பஸ், ரெயில்களில் இருக்கைகள், கைப்பிடிகள், கம்பிகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்குமாறு கூறியுள்ளது. மேலும், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை சுவரொட்டியாக ஒட்டுமாறும் அறிவுறுத்தி உள்ளது.

Related Tags :
Next Story