முகக்கவசம் அத்தியாவசிய பொருளாக அறிவிப்பு


முகக்கவசம் அத்தியாவசிய பொருளாக அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2020 8:04 PM GMT (Updated: 13 March 2020 8:04 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, முகக்கவசத்தை அத்தியாவசிய பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு முகக்கவசம், கைகழுவும் திரவம் (சானிடைசர்), கையுறைகள் ஆகியவற்றை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்களாக அறிவித்துள்ளது. அதோடு பேரிடர் மேலாண்மை விதிகளையும் அமல்படுத்தி உள்ளது.

இதன்மூலம் மாநில அரசுகள் இவைகளின் உற்பத்தி, வினியோகம், விலை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இவைகளை பதுக்கவோ, கள்ளச்சந்தையில் விற்கவோ முடியாது எனவும் அந்த உத்தரவில் நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story