இந்தியாவில் 93 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி


இந்தியாவில் 93 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 15 March 2020 4:52 AM GMT (Updated: 15 March 2020 4:52 AM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. சீனாவில் உகானில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 3,199 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இன்னும் 80,000 பேருக்கு தொற்று இருந்து வருகிறது. 

இந்தநிலையில்  இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்து உள்ளது.  மராட்டிய மாநிலத்தில்  அதிகபட்சமாக 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் 22 பேர் கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவுக்கு வந்த இத்தாலியை சேர்ந்த 16 பேரும் கனடா நபர் ஒருவரும் கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இதை பேரிடர் சூழலாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story