கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கான உதவி எண்கள் அறிவிப்பு


கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கான உதவி எண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 1:24 PM GMT (Updated: 16 March 2020 1:24 PM GMT)

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கான உதவி எண்களை வெளிவிவகார அமைச்சகம் இன்று அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 6,036 ஆக உயர்ந்துள்ளது.  உலகெங்கிலும் 155 நாடுகளில் 1.69 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் அதிக அளவிலும் அதனை அடுத்து ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 107 ஆக அதிகரித்து இருந்தது.  2 பேர் பலியாகி உள்ளனர்.  13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.  இன்று 114 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனை அடுத்து, மத்திய வெளிவிவகார அமைச்சகம் ஆனது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்தினை தொலைபேசி வழியே தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை இன்று அறிவித்து உள்ளது.

கட்டுப்பாட்டு அறை  1800118797 (இலவச எண்)

+91 11 23012113
+91 11 23014104
+91 11 23017905

பேக்ஸ் எண்  +91 011 23018158 (பேக்ஸ்)
இமெயில்  covid19@mea.gov.in

Next Story