எங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்


எங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்
x
தினத்தந்தி 18 March 2020 8:55 AM GMT (Updated: 18 March 2020 10:04 AM GMT)

எங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறி உள்ளார்.

பெங்களூரு

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்தார் . அவருக்கு ஆதரவாக 22 ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம்  அருகே உள்ள சொகுசு ஓட்டல்  ஒன்றில் தங்கி உள்ளனர். இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள  ஓட்டலுக்குள் செல்ல முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயா சிங் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர்  தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதை தொடர்ந்து அந்த  ஓட்டலுக்கு வெளியே அமர்ந்து திக்விஜய் சிங்  மற்றும் சிவக்குமார் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திக் விஜய் சிங்- சிவகுமார் ஆகியோரை  கைது செய்து   அம்ருதஹல்லி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். 

இது குறித்து திக விஜய சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களை உள்ளூர் டி.சி.பி அலுவலகத்திற்கு பெங்களூரு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பாஜகவின் சிறையில் இருக்கும் எங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று நான் கோரிவருகிறேன். எங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் . நாம் சர்வாதிகார நாட்டில் அல்ல, ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.

 "சட்டமன்ற உறுப்பினர்கள் சிறையாக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்குச் செய்திகள் வந்தன. தனிப்பட்ட முறையில் நான் 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசினேன். தாங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு அறைக்கும் முன்பாகவும் 24 மணி நேரமும் காவலுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமல்ல, வெளியில் இருக்கும் எம்.எல்.ஏ க்களுக்கு கூட பாஜக தரப்பு 25 முதல் 30 கோடி வரை வழங்குவதாக கூறியுள்ளது" எனத் தெரிவித்தார். 

Next Story