இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்


இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
x
தினத்தந்தி 18 March 2020 6:30 PM GMT (Updated: 2020-03-18T23:49:25+05:30)

இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்கள் வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

இலகு ரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. உள்நாட்டு தயாரிப்பான இந்த விமானங்கள் இந்திய பாதுகாப்பு படைகளில் இணைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நவீனப்படுத்தப்பட்ட 83 தேஜாஸ் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது.

Next Story