டெல்லியில் 20க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கூடத் தடை


டெல்லியில் 20க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கூடத் தடை
x
தினத்தந்தி 19 March 2020 1:56 PM GMT (Updated: 19 March 2020 1:56 PM GMT)

டெல்லியில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கூடத் தடை விதித்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லியில் இதுவரை 10 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் குணமடைந்துள்ளனர். மீதி 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும், அனைத்து ரெயில் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 

டெல்லியில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கூடத் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் உணவகங்களை மூட உத்தரவிடப்படுகிறது.   வீடுகளுக்கு சென்று உணவுகளை வழங்கும் 'ஹோம் டெலிவரி' முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு பஸ் டிப்போக்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு கிருமி நாசினி  தெளிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story