கொரோனா அல்ல கர்மா; புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கருத்து


கொரோனா அல்ல கர்மா; புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கருத்து
x
தினத்தந்தி 19 March 2020 4:02 PM GMT (Updated: 19 March 2020 4:02 PM GMT)

கொரோனா அல்ல கர்மா என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நோய் தொற்றிலிருந்து விடுபடுவதற்கான உரிய மருத்துவ சிகிச்சை இல்லாத நிலையில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  உலக அளவில் இன்றுவரை 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில், மனிதர்கள் முக கவசம் அணிந்து கொண்டு கைகளை கட்டியபடி கூண்டுக்குள் அடைப்பட்டு நிற்க, அவர்களை சுற்றிலும், விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்டவை வெளியே சுதந்திரமாக இருக்கின்றன.

அதன் கீழே இது கொரோனா அல்ல கர்மா என பதிவிட்டுள்ளார்.  நாம் யாரை உட்கொள்கிறோம் என்ற பொறுப்பை ஏற்று கொள்கிறோமா? என்றும், இது தீங்கில்லா உணவை தேர்வு செய்யும் வழக்கம் பற்றிய விசயமும் ஆகும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதில், அகிம்சையை நாம் பயிற்சி செய்கிறோமா? வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும், உணவிலும் அகிம்சை இருக்க வேண்டும் என்றும் கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.

Next Story