இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 166 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் நேற்றைய தினம் வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,274 ஆக இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் மேலும் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149-ல் இருந்து 166 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 411-ல் இருந்து 473 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,135 பேருக்கும், தமிழகத்தில் 738 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.
Related Tags :
Next Story