தெருவை சுத்தம் செய்த அமைச்சர் -அவரது மனைவி டுவிட்டரில் குவியும் பாராட்டுகள்


தெருவை சுத்தம் செய்த அமைச்சர் -அவரது மனைவி டுவிட்டரில் குவியும் பாராட்டுகள்
x
தினத்தந்தி 12 April 2020 1:46 PM IST (Updated: 12 April 2020 1:46 PM IST)
t-max-icont-min-icon

தெருவை சுத்தம் செய்த அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 பெங்களூரு

ஒரு கர்நாடக மந்திரி மற்றும் அவரது மனைவியின் படம் இப்போது டுவிட்டரில் வைரலாகி உள்ளது.தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் வீட்டைசுற்றி உள்ள தெருக்களை சுத்தம்செய்து உள்ளனர். அது தொடர்பான  படங்களை பெங்களூரு மகாநகர் பாலிகே (பிபிஎம்பி) ஆணையர் பி.எச்.அனில்குமார் பகிர்ந்துள்ளார். 

உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கும், உழைப்பின் கவுரவத்தை நிலைநிறுத்துவதற்கான வலுவான செய்தி தங்களின் இந்த செயல் மரியாதைக்குரிய மந்திரி மற்றும் உங்கள் மனைவிக்கு நன்றி" என்று ஆணையாளர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

அமைச்சர் மற்றும் அவரது மனைவியின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

1 More update

Next Story