பிரதமர் உரையை ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன்- ப.சிதம்பரம் டுவிட்


பிரதமர் உரையை ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன்- ப.சிதம்பரம் டுவிட்
x
தினத்தந்தி 13 April 2020 7:53 PM IST (Updated: 13 April 2020 7:53 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் உரையை ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் . ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது

ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி
பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம். இந்த ரூ 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி.நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story